இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 20ம் திகதி, ரம்ஜான் 9ம் திகதி, 3.5.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி நள்ளிரவு 2:36 வரை, அதன்பின் துவாதசி திதி, பூரம் நட்சத்திரம் மாலை 6:02 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த - அமிர்தயோகம்.
நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை. குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. சூலம் : மேற்கு • பரிகாரம் : வெல்லம் • சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம் • பொது: ஏகாதசி விரதம், பெருமாள், சூரியபகவான் வழிபாடு.
மேஷம்
மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வப் பிரார்த்தனையை மேற்கொள்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். புதுமை படைக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். நட்பு வட்டம் விரிவடையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உயர்வு பெறும் நாள்.
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணை யாக இருப்பார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.
கடகம்
கடகம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கி்க்கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறு பட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப் புகள் தேடி வரும். மனநிறைவு கிட்டும் நாள்.
சிம்மம்
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். அனாவசிய மாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தரவேண்டாம். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
கன்னி
கன்னி: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள் .
துலாம்
துலாம்: வீரியத்தை விட காரியம் தான் பெரிது என்பதை உணர்வீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் உங்கள் வேலைகளை சுறுசுறுப்பாக முடித்துக் காட்டுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.
தனுசு
தனுசு: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்து வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப் பார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.
மகரம்
மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.
கும்பம்
கும்பம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கை கூடிவரும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும் . வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
மீனம்
மீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பயணங்களால் பயனடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.